பெங்களூரு:
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் சமர். இவர் பெங்களூரு அல்சூர்கேட் பகுதியில் தங்கி இருந்து நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சமருக்கும், பெங்களூருவில் வசித்து வரும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த திருமணம் ஆன பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த பெண்ணின் செல்போனில் இருந்து பெண்ணின் ஆபாச புகைப்படத்தை, சமர் எடுத்து உள்ளார்.
பின்னர் அதனை காட்டி பெண்ணை மிரட்டிய சமர் தன்னுடன் உல்லாசம் அனுபவிக்க வரும்படி வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு பெண் மறுத்ததால் அவரது ஆபாச படத்தை சமர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பெண் அளித்த புகாரின்பேரில் வடகிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சமரை கைது செய்தனர்.