பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: செனகலில் 40 பேர் பலி! பலர் படுகாயம்


செனகல் நாட்டில் அதிவேக பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் 40 பேர் பலியாகியுள்ளனர், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அடைந்துள்ளனர்.

பேருந்து மோதி விபத்து

மத்திய செனகலில் உள்ள காஃப்ரைன் மற்றும் தம்பா இடையே இரண்டு அதிவேக பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி மிகப்பெரிய விபத்து அரங்கேறியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 8) உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:15 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தில் தம்பாவில் இருந்து பயணித்த பேருந்து, டக்காரில் இருந்து வந்த பேருந்தின் மீது ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டுள்ளது. 

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: செனகலில் 40 பேர் பலி! பலர் படுகாயம் | Senegal Bus Crash Kills 40 People Die 115 Injured( Twitter/@salifsakhanokho)

இதில் 40 பேர் வரை பலியாகியுள்ள நிலையில், 115 பேர் காயமடைந்துள்ளனர் என்று மீட்பு படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

செனகலின் தேசிய தீயணைப்பு படையின் செயல்பாட்டுத் தலைவர் கர்னல் சேக் ஃபால் “இது ஒரு கடுமையான விபத்து” என்று தெரிவித்துள்ளார்.

தேசிய துக்கம் அனுசரிப்பு

இந்நிலையில் செனகல் ஜனாதிபதி மேக்கி சால் தனது ட்விட்டர் பதிவில் “ 40 பேர் வரை பேருந்து விபத்தில் உயிரிழந்ததை அடுத்து ஜனவரி 9ஆம் தேதி முதல் 3 நாள் தேசிய துக்கம் அனுசரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: செனகலில் 40 பேர் பலி! பலர் படுகாயம் | Senegal Bus Crash Kills 40 People Die 115 Injured( Twitter/@salifsakhanokho)

அத்துடன் “சாலை பாதுகாப்பு மற்றும் பொது பயணிகள் போக்குவரத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க அதே தேதியில் ஒரு இடைநிலை கவுன்சில் நடத்தப்படும்” என்றும் செனகல் ஜனாதிபதி அறிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.