ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு பெரும் சவலாக இருக்கும் புடின் மற்றும் அவரது உடல்நலன் குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருவது வழக்கமாக இருக்கிறது.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் நீண்ட நாட்களுக்கு உயிரோடு இருக்க மாட்டார் என உக்ரைன் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் உளவுப்பிரிவுத் தலைவர் மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் நீண்டநாள் உயிரோடு இருக்கமாட்டார். புடினின் நெருக்கமான வட்டாரங்களில் இருந்து இந்த தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, , “புடினின் உடல்நிலை தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொது நிகழ்வில் புடினின் பாடி டபுளை பயன்படுத்துகிறார்கள். அவரது சமீபத்திய தோற்றங்களில் அவரது உயரம் மாறுபட்டுள்ளது. பழைய மற்றும் சமீபத்திய புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்தால் புடினின் காது வித்தியாசமாக இருக்கும். கைரேகை போன்றதுதான் காதுகளும். ஒவ்வொரு நபரின் காதும் தனித்துவமானது.” என்று உக்ரைன் உளவுப்பிரிவுத் தலைவர் மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் தெரிவித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
முதல்முறையாக இந்தியா – ஜப்பான் போர் பயிற்சி; சீனாவுக்கு செக்.!
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. போர் காரணமாக உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர். ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் எனவும், அமைதி திரும்ப வழிவகை செய்ய வேண்டும் எனவும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ரஷ்யா தனது முடிவில் பின்வாங்குவதாக தெரியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் போரை கைவிடப்போவதாக ரஷ்யாவில் இருந்து வந்த தகவல்கள் தெரிவித்தன. ஆனாலும், ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் ஓய்ந்தபாடில்லை.