வேண்டாம் அப்படி செய்யாதீங்க… ராகுல் காந்தி பயணம் பற்றி பிரசாந்த் கிஷோர் வெடி பேச்சு!

பிரசாந்த் கிஷோர்… இந்த பெயரை கேட்டாலே மோடியை மத்தியில் ஆட்சி அமைக்க வைத்தது முதல்
ஸ்டாலின்
தலைமையில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய வேலை செய்தது வரை மாநிலங்களின் லிஸ்ட் தான் முதலில் தோன்றும். அதன்பிறகு நிதிஷ் குமாருக்கு குட்பை சொன்னது,
காங்கிரஸ்
கட்சியில் சேர எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது என அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறின.

ஜன் சூரஜ் யாத்ரா

இவரது லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் ”ஜன் சூரஜ் யாத்ரா” என்ற பெயரில் பிகார் மாநிலம் முழுவதும் நடைபயணம் செய்ய புறப்பட்டது தான். இது பிரசாந்த் கிஷோரின் நேரடி அரசியல் அத்தியாயத்தின் தொடக்கம் என்று கூட சொல்லலாம். இதன் முடிவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போகிறாரா? இல்லை வேறு ஏதேனும் திட்டங்கள் வைத்திருக்கிறாரா? என்பது தெரியவரும்.

நிதிஷ் உடன் மோதல்

இந்த பயணத்தின் போது பிரசாந்த் கிஷோர் கூறும் கருத்துகள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. குறிப்பாக பிகாரில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணி குறித்து தாக்கி பேசி வருகிறார். இதற்கு தக்க பதிலடியும் கிடைத்து வர களம் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி பற்றியும், அவரது இந்திய ஒற்றுமை பயணம் பற்றியும் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

இந்திய ஒற்றுமை பயணம்

பிகாரின் கிழக்கு சம்பரான் மாவட்டம் மொதிஹரியில் பிரசாந்த் கிஷோரிடம் ராகுலின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கும், ஜன் சூரஜ் யாத்ராவிற்கும் இடையில் உள்ள ஒற்றுமை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, காங்கிரஸ் ஒரு பேரியக்கம். ராகுல் காந்தி பெரிய மனிதர். அவரது பயணத்தையும், என்னுடைய நடைபயணத்தையும் ஒப்பிட வேண்டாம்.

ராகுல் குறித்து பேச்சு

தேசிய அளவில் கவனம் ஈர்க்கும் வகையில் ராகுல் காந்தி செயல்பட்டு வருகிறார். இதற்காக 3,500 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து கொண்டிருக்கிறார். என்னை பொறுத்தவரை கிலோமீட்டர் என்பது ஒரு விஷயமே கிடையாது. நான் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு தீர்வு காண செல்கிறேன்.

ஒப்பீடு வேண்டாம்

இந்த பயணத்தில் ஒலிம்பிக் சாதனைகள் எதுவும் படைக்கப் போவதில்லை. மேலும் நான் எவ்வளவு ஃபிட்டாக இருக்கிறேன் என நிரூபிக்கவும் செல்லவில்லை. எனவே என்னுடைய பயணத்தை ராகுலுடன் ஒப்பிட வேண்டாம் எனக் கூறியுள்ளார். இது சூசகமாக ராகுல் காந்தியின் பயணத்தை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

சமதான் யாத்ரா

மேலும் முதல்வர் நிதிஷ் குமார் மேற்கொண்டு வரும் சமதான் யாத்ரா பற்றி கேட்கப்பட்டது. அதற்கு, காரில் பாதுகாப்பு வீரர்கள் துணையுடன் செல்கிறார். இது ஒரு பயணமா? நீங்கள் செயல்படுத்தும் திட்டங்களின் பலன்களை செய்தித்தாள்களை பார்த்து தான் தெரிந்து கொள்வீர்களா? முதலில் கிராமம் கிராமமாக சென்று பாருங்கள். உண்மை நிலவரம் அப்போது தெரியும் எனக் கடுமையாக பிரசாந்த் கிஷோர் விமர்சித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.