சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 134வது வார்டில் பாஜகவை சேர்ந்த உமா ஆனந்தன் 2,036 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சென்னையில் பாஜக வெற்றி பெற்ற ஒரே ஒரு வார்டு இதுவே ஆகும். இதன்மூலம் 21 ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக மீண்டும் சென்னையில் கால் பதித்தது.
சர்ச்சைக்குரிய பேச்சு
அதேசமயம் கோட்ஸே ஆதரவாளர், பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்றெல்லாம் கூறி உமா ஆனந்தன் பிரச்சாரத்தில் ஈடுபட்டது சர்ச்சையானது. இந்நிலையில் கவுன்சிலராக பொறுப்பேற்ற 10 மாதங்கள் ஆன நிலையில் தனது அனுபவங்கள் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் பகிர்ந்துள்ளார். அதில், தனது செயல்பாடுகள் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் இருக்கிறது.
கவுன்சிலர் பணி
திமுக
கவுன்சிலர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் தனக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார். திமுக உடன் அண்ணாமலை மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில், நீங்கள் மட்டும் இணக்கமான போக்கை கடைபிடிப்பது ஏன் எனக் கேட்கப்பட்டது. அதற்கு, திமுகவினர் நினைத்திருந்தால் எனக்கு எதிரான நிலையில் இருந்து செயல்பட முடியும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.
சவாலான அண்ணாமலை
அனைத்து மண்டல கவுன்சிலர்கள், எனது தொகுதி எம்.எல்.ஏ, மற்ற அதிகாரிகள் என அனைவரும் கூட்டங்கள், திட்ட செயல்பாடுகளில் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சி ரீதியாக செயல்படுகிறார். ஆனால் நான் கவுன்சிலராக செயல்பட்டு வருகிறேன். அதேசமயம் எப்போதெல்லாம் எனது நம்பிக்கை மற்றும் எனது கட்சியை விமர்சிக்கிறார்களோ?
மேயர் பிரியா எப்படி?
அப்போதெல்லாம் தக்க பதிலடி கொடுப்பேன் எனத் தெரிவித்தார். சென்னை மேயர் பிரியா ராஜனின் செயல்பாடுகள் பற்றி கேள்வி எழுப்புகையில், அவர் பழகுவதற்கு இனிமையான நபர். இளம் மேயர். நிறைய கற்றுக் கொள்ள விரும்புகிறார். தன்னை படிப்படியாக மேம்படுத்தி வேண்டும் என நினைப்பதாக குறிப்பிட்டார். அரசியல் ரீதியாக உங்கள் இலக்கு என்னவென்று கேட்கப்பட்டது. அதற்கு, தலைவர் அண்ணாமலையின் கைகளை பலப்படுத்த வேண்டும்.
அரசியல் கனவு
கட்சியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். இந்த வயதில் நான் கவுன்சிலர் ஆவேன் என நினைக்கவில்லை. எல்லாம் கடவுளின் அருள் தான். அரசியல் ரீதியாக எனது பாதையில் வரும் விஷயங்களை நான் ஏற்க தயாராக இருக்கிறேன் என்றார். நிறைய கவுன்சிலர்கள் தங்கள் குடும்பத்து ஆண்களால் கட்டுப்படுத்தப்படுவதாக பேச்சு அடிபடுகிறதே? அதைப் பற்றி உங்கள் கருத்து?
ஆண்களின் தலையீடு
எனது கணவர் தற்போது உயிருடன் இல்லை. என்னுடைய மகள் அமெரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். எனவே கவுன்சிலராக எனது பணிகளை 100 சதவீதம் அளிக்க முடிகிறது. என்னால் சாலையில் தனியாக நடந்து சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்க முடியும். அவர்களுக்கு தேவையான விஷயங்களை நேரடியாகவே செய்வதாக உமா ஆனந்தன் கூறினார்.