பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க விமான நிலையம் நெருங்கிய நிலையில், விபத்தில் சிக்குவதற்கு முன்னர் விமானி மது போத்தலுடன் தயாராக இருக்க கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
ஐபீரியா ஏர்லைன்ஸ் விமான விபத்து
குறித்த விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த அனைவரும் உடல்கருகி பலியாகினர்.
ஸ்பெயின் நாட்டின் ஐபிசா பகுதியில் அமைந்துள்ள மலை மீது மோதி ஐபீரியா ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது.
@getty
1972 ஜனவரி 7ம் திகதி நடந்த இந்த நடுக்கும் சம்பவத்திற்கு முன்னர், அந்த விமானத்தின் முதன்மை விமானி மது மற்றும் கால்பந்து விளையாட்டு தொடர்பில் விவாதித்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மொத்தம் 98 பயணிகளும் விமானிகள் உட்பட 6 ஊழியர்களும் அந்த விபத்தில் கொல்லப்பட்டனர்.
குறித்த விமானமானது வலென்சியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பலேரிக் கடல் மீது பறந்து, தரையிறங்க ஆயத்தமான நிலையில்,
மதியம் 12.15 மணிக்கு ஐபிசா விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட விமானி, 5,500 அடிக்கு கீழே இறங்க அனுமதி கோரியுள்ளார்.
அத்துடன், மது போத்தலுடன் தயாராக இருங்கள் எனவும் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் விளையாட்டாக பேசியுள்ளார்.
மது போத்தலுடன் தயாராக இருங்கள்
மேலும், கால்பந்து விளையாட்டு தொடர்பில் விமானி அந்த அதிகாரிகளுடன் தமது கருத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
விமானமானது அப்போது ஓடுதளம் 7ஐ நெருங்கியதுடன் 2,000 அடிக்கு கீழே பறந்துகொண்டிருந்தது,
@getty
மட்டுமின்றி, 2,000 அடிக்கு கீழே பறந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இரு விமானிகளும் தாங்கள் Atalayasa மலையை நோக்கி ஆபத்தான கோணத்தில் விமானத்தை செலுத்துவதை உணரவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் கண்ணிமைக்கும் நொடியில் அந்த விமானமானது Atalayasa மலை மீது மோதி தீ கோளமாக மாறியுள்ளது.
மோசமான வானிலையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதலில் கூறப்பட்டது.
ஆனால் அதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைக்கு பின்னர், விமானியின் தவறால் நடந்த விபத்து என உறுதி செய்யப்பட்டது.