பிரபல கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல் நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்து இருக்கும் நிலையில் அவர் வசிப்பதற்காக மாதம் £ 2,50,00 செலவாகும் 17 அறைகள் கொண்ட சொகுசு ஹோட்டல் ஒன்றில் இரண்டு தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய கிளப்பில் ரொனால்டோ
கத்தார் உலக கோப்பை போட்டிகள் பிறகு மான்செஸ்டர் அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொண்ட போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது சவுதி அரேபியாவின் கால்பந்து கிளப் அணியான அல் நஸருடன் 173 மில்லியன் மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமையன்று, சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் சென்றடைந்த ரொனால்டோவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அதற்கு அடுத்த நாள் அல்-நாசர் கிளப்பின் மைதானத்திலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
AP/REX/Shutterstock
தன்னுடைய புதிய அணியுடன் பயிற்சியை தொடங்கியுள்ள ரொனால்டோ, ஜனவரி 21 அன்று அல் நாசர் அணிக்காக முதல் போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
17 அறைகள் கொண்ட சொகுசு ஹோட்டல்
இந்நிலையில் சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப்பில் இணைந்துள்ள கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்காலிகமாக வசிப்பதற்காக மாதம் £ 2,50,00 செலவாகும் “கிங் சூட்” வசதி கொண்ட சொகுசு ஹோட்டல் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது.
99 தளம் கொண்ட இந்த சொகுசு ஹோட்டலில் 17 அறைகளை உள்ளடக்கிய இரண்டு தளங்கள் (48 மற்றும் 50) ஒதுக்கப்பட்டுள்ளன.
INTERENET PICTURE
இந்த இரண்டு தளங்களில், ரொனால்டோ விளையாடுவதற்கு ஒரு டென்னிஸ் கோர்ட், ஓய்வெடுக்க ஸ்பா மற்றும் சானா, தனியார் அலுவலகம், சாப்பாட்டு அறை, படுக்கை அறை மற்றும் ஊடக அறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
அத்துடன் பசியாக இருக்கும் போது, ரொனால்டோ முழுவதும் சிறந்த சமையல் உணவுகளை சாப்பிட விருப்பம் உள்ளது. சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் உணவு ரொனால்டோவிற்காக தயாராக இருக்கும்,
INTERENET PICTURE
இந்த “கிங் சூட்” சிறப்பம்சங்கள் குறித்து ஹோட்டல் நிர்வாகம் சமூக ஊடகத்தில் வெளியிட்டு இருந்த குறிப்பில், “ரியாத்தின் இணையற்ற காட்சிகளுடன் விருந்தினர்களை மகிழ்விக்கும்” என குறிப்பிட்டுள்ளது.
மேலும் ரொனால்டோ மத்திய கிழக்கு நாட்டில் நிரந்தர வீடு ஒன்றை கண்டுபிடிக்கும் வரை, காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸும் ரொனால்டோவும் இந்த சொகுசு ஹோட்டலில் தங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.