போர் நிறுத்தம் நிறைவடைந்த பிறகு நடத்தப்பட்ட தாக்குதலில் குபியான்ஸ்க் திசையில் 30 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தம்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 11 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 36 மணி நேர போர் நிறுத்தத்தை ஜனாதிபதி புடின் அறிவித்திருந்தார்.
இதற்கிடையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அறிவிப்புகளை அவருடைய ரஷ்ய துருப்புகளே மதிக்கவில்லை என்று உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது.
The consequences of the shelling of #Kupiansk in #Kharkiv region.
The shells hit agricultural buildings. pic.twitter.com/c6b2bLkUdm
— NEXTA (@nexta_tv) January 1, 2023
அத்துடன் ரஷ்ய ஜனாதிபதியின் இத்தகைய போர் நிறுத்த நடவடிக்கையை ஏற்க முடியாது எனவும் உக்ரைன் அறிவித்து இருந்தது.
30 உக்ரைனிய வீரர்கள் பலி
இந்நிலையில் போர் நிறுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து, இருநாட்டு படைகளும் மீண்டும் போர் தாக்குதலில் குதித்துள்ளனர்.
சனிக்கிழமையன்று கார்கிவின் குபியன்ஸ்க்(kupiansk) திசையில் நடந்த சண்டையில் ரஷ்ய துருப்புக்களால் குறைந்தது 30 உக்ரேனியப் படைவீரர்கள் வரை கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி, லெப்டினன்ட்-ஜெனரல் இகோர் கொனாஷென்கோவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
EPA
அத்துடன் சுகந்திர பகுதிகளாக அறிவிக்கப்பட்ட லுகான்ஸ்க் மக்கள் குடியரசின் (எல்பிஆர்) நோவோசெலோவ்ஸ்கி பிராந்தியத்திலும், கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள சின்கோவ்காவைச் சுற்றியுள்ள பகுதியிலும், ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனின் ஆயுதப் படைகளின் ஆயுதக் குவியலுக்கும் சேதம் விளைவித்ததாக கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் காலாட்படை வீரர், போர் வாகனங்கள், கவசப் பணியாளர் கேரியர் மற்றும் இரண்டு கார்கள் அழிக்கப்பட்டதாக தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார்.