6 நிமிட வித்தியாசத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள்: ஆனால் பெற்றோர்களுக்கு காத்திருந்த ட்விஸ்ட்!


அமெரிக்காவில் 6 நிமிட இடைவெளியில் பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், குழந்தைகள் இருவரும் வெவ்வேறு வருடம், வெவ்வேறு மாதம், வெவ்வேறு நாட்களில் பிறந்து இருப்பது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி வழங்கியுள்ளது.

இரட்டை குழந்தைகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கிளிஃப் ஸ்காட் என்பவரின் மனைவியான களி ஜோ ஸ்காட்டிற்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

தற்போது பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறப்பது என்பது சாதாரண விஷயம் என்றாலும், 6 நிமிட இடைவெளியில் களி ஜோ ஸ்காட்டிற்கு பிறந்த பெண் குழந்தைகள் இருவரும் வெவ்வேறு வருடம், வெவ்வேறு மாதம், வெவ்வேறு நாட்களில் பிறந்து பெற்றோர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

6 நிமிட வித்தியாசத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள்: ஆனால் பெற்றோர்களுக்கு காத்திருந்த ட்விஸ்ட்! | Us Texas Twin Girls Born On In Different Years

களி ஜோ ஸ்காட்டின் இரட்டை குழந்தைகளை ஜனவரி 11ம் திகதி அறுவை சிகிச்சை மூலம் எடுக்க மருத்துவர்கள் திட்டமிட்டு இருந்த நிலையில், இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட களி ஜோ ஸ்காட்டிற்கு டிசம்பர் 31ம் திகதியே அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதன்மூலம் கிளிஃப் ஸ்காட் மற்றும்  களி ஜோ ஸ்காட்டி தம்பதிக்கு 2022 டிசம்பர் 31ம் திகதி 11:55 P.M மணிக்கு ஆனி ஜோ ஸ்காட் என்ற பெண் குழந்தையும், அதிலிருந்து 6 நிமிடங்களுக்கு பிறகு 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி சரியாக 12.01 A.M மணிக்கு எஃபி ரோஸ் ஸ்காட் என்ற பெண் குழந்தையும் பிறந்துள்ளது.


பெற்றோர்கள் உற்சாகம்

இந்நிலையில் 6 நிமிட இடைவெளியில் வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு மாதங்களில் பிறந்த ஆனி ஜோ மற்றும் எஃபி ரோஸ் ஸ்காட் ஆகியோரை அறிமுகம் செய்வதில் நான் மற்றும் கிளிஃப் பெருமிதம் கொள்கிறோம் என்று தம்பதியினர் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

6 நிமிட வித்தியாசத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள்: ஆனால் பெற்றோர்களுக்கு காத்திருந்த ட்விஸ்ட்! | Us Texas Twin Girls Born On In Different Years

அத்துடன் குழந்தைகள் இருவரும் 5.5 பவுண்டுகள் எடையுடன் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் பிறந்தனர் என்றும் இந்த சாகசத்திற்காக நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.