Coronavirus: சீனாவில் களியாட்டம் போடும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஜப்பான்

கொரோனா பரவல் கட்டுப்பாடுகள்: கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அடுத்த அலை தொடங்கிவிட்டதோ என்ற கவலைக்கு மத்தியில் சீனிஆ பயணத்தடைகளை நீக்கினால், சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்குகிறது ஜப்பான். கோவிட் பரவல், சீனாவின் நடவடிக்கைகளை வைத்து முடிவு செய்யப்படுகிறதா? இந்த கேள்வி அனைவருக்கும் ஏற்படுவதற்கு காரணம் என்ன?

கொரோனா வைரஸ் சீனாவில் உற்பத்தியாகி, உலகம் முழுவதும் களியாட்டம் போட்டு, இன்னும் அடங்காமல் வெவ்வேறு அவதாரங்களை எடுத்து உலகையே அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருக்கிறது. 

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு ஜப்பான் கோவிட் கட்டுப்பாடுகளை கடுமையாக்குகிறது. டோக்கியோ:  கோவிட் நோய் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தில் ஜப்பான் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளது.  

ஜப்பான் நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 8) முதல் சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து வரும் பயணிகளுக்கான எல்லைக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. சீனாவில் இருந்து ஜப்பானுக்கு வரும் பயணிகள் அனைவரும், தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ‘கோவிட் நெகட்டிவ்’ என்பதற்கான ஆதாரமாக சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். 

சீனாவில் இருந்து புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் இந்த கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஜப்பான் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. அதிக அளவில் பரவக்கூடிய கோவிட் விகாரங்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | மாட்டிறைச்சி சாப்பிடுவது உடலுக்கு கெட்டதா… சர்ச்சையை விட சத்து ஜாஸ்தி!

ஹாங்காங் அல்லது மக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் தற்போதைக்கு பொருந்தாது என்றும் ஜப்பான் தெரிவித்துள்ளது.

சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளும் அல்லது ஜப்பானுக்கு வருவதற்கு முன் ஏழு நாட்களுக்குள் சீனாவிற்கு சென்றவர்களும் ஜப்பானுக்கு வரும்போது பி.சி.ஆர் அல்லது உயர்தர ஆன்டிஜென் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு சுற்றுலா பயணி ஜப்பானுக்கு வந்தவுடன், செய்யும் சோதனைகளில், கொரோனா பாசிடிவ் என்று முடிவுகள் வந்தால், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதிலும் அறிகுறிகள் இருப்பவர்கள் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். அறிகுறியற்றவராக இருக்கும் கொரோனா பாசிடிவ் பயணிகள், ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்தலில் இருக்க வேண்டும்.  

முன்னதாக, ஹாங்காங் மற்றும் மக்காவ்விலிருந்து வருபவர்கள் நான்கு ஜப்பானிய விமான நிலையங்களுக்கு மட்டுமே வருமாறு ஜப்பான் ஏற்பாடுகளை செய்துள்ளது.

சீனா, இன்று (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 8) முதல், நாட்டிற்கு வரும் பயணிகளுக்காக தனது எல்லைகளை திறந்தது. ஞாயிற்றுக்கிழமை, புதிய விதிகளின் கீழ் வரும் பயணிகளின் முதல் பிரிவு குவாங்சோ மற்றும் ஷென்சென் விமான நிலையங்களில் தரையிறங்கியதாக CGTN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் மற்றும் டொராண்டோவிலிருந்து வந்த விமானத்தில் 387 பேர் இருந்தனர். இருப்பினும், வந்த பிறகு யாரும் கோவிட்-19 சோதனைகள் அல்லது ஐந்து நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை.

மேலும் படிக்க | COVID-19: இனி ‘இந்த’ மாநிலத்தில் மாஸ்க் கட்டாயம்! புதிய விதிமுறைகள் அமல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.