திருப்பதியில் தங்கும் அறை வாடகை 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.
திருப்பதி மலையில் உள்ள நாராயணகிரி விருந்தினர் மாளிகை பகுதியில் இருக்கும் நான்காவது கட்டட தொகுதியில் இதுவரை அறை ஒன்றுக்கு நாள் வாடகை 750 ரூபாயாக இருந்தது.
அங்குள்ள அறைகளை மராமத்து செய்த தேவஸ்தான நிர்வாகம் அவற்றின் வாடகையை தலா 1,700 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்பெஷல் டைப் காட்டேஜ்களின் ஒரு நாள் வாடகையை 750 ரூபாயில் இருந்து 2200 ரூபாயாக தேவஸ்தானம் அதிகரித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அதே போல் அறை வாடகை உயர்த்தப்பட்டதற்கு தெலுங்கு தேசம், பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக கட்டட அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் அறை கட்டணத்தை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in