அவை நாகரிகத்தை மதிக்காத ஆளுநர்; ராமதாஸ் கண்டனம்.!

நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று கூடியது. அப்போது உரையாற்றிய ஆளுநர், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றிருந்த ’திராவிட மாடல்’ என்ற வார்த்தையை படிக்காமல் தவிர்த்தார். ‘அமைதி பூங்கா தமிழ்நாடு’ என்ற வாக்கியத்தையும் குறிப்பிடாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தார். சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல் என்ற வார்த்தைகள் இருந்ததால் 65ஆவது பத்தியை வாசிக்காமல் அப்படியே ஆளுநர் விட்டு விட்டார்.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை; உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று சட்டப்பேரவையில் ஆளுநர் முன்பே கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் தாமாக பேசிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்கும் தீர்மானத்தை அவர் முன்பே கொண்டு வந்தார்.

அதைத் தொடர்ந்து ஆளுநர் தாமாக பேசிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்கும் தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்தபோதே, உடனடியாக அவையில் இருந்து ஆர்.என்.ரவி வெளியேறினார். தேசிய கீதம் இசைக்கும் முன்பாக அவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது கவனிக்கத்தக்கது. ஆளுநரின் இந்நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதாக விசிக அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ஆளுநரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்எஸ்எஸ் முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும். அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை.

எனவே அவர் பதவி விலக வலியுறுத்தி ஜனவரி -13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தலில் யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி !

அதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கண்டனம் தெரிவித்தார். மேலும் மதுரை எம்பி சு.வெங்கடேசனும் தனது கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். இந்தநிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, ‘‘சட்டப்பேரவை மரபுகளையும், அவை நாகரிகத்தையும் மதிக்காத இப்படிப்பட்ட ஆளுனரை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை!’’ என பதிவிட்டுள்ளார். அதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் கண்டனம் பதிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.