வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் இந்திய தடுப்பூசிகளுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது; இதை பயன்படுத்தி போலி தடுப்பூசி மருந்துகள் சந்தையில் விற்கப்படுவதாக சீன சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளதால் ஏராளாமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். நோயை கட்டுப்படுத்த சீன அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி மருந்துகளை வாங்க சீன மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சீனா இன்னும் இந்த மருந்துகளுக்கு உரிய அனுமதி அளிக்கவில்லை. இதனால் பலர் இந்த மருந்துகளை ஆன்லைனில் வாங்கி வருகின்றனர்.
இந்தியாவின் தடுப்பு மருந்துகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதைப் பயன்படுத்தி கள்ளச்சந்தையில் போலி கொரோனா மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. சீனாவில் விற்கப்படும் இந்திய மருந்துகளில் அதிகளவில் போலியானவை என சீன சுகாதாரத்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement