தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “நாங்கள் மதவாதத்துக்குத்தான் எதிரிகளே தவிர, மதத்துக்கு அல்ல” என கடந்த வாரம் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன், “ `மதவாதத்துக்குத்தான் எதிரி, மதத்துக்கு எதிரிகள் அல்ல’ என்று கூறும் முதல்வர் ஸ்டாலின், இனி இந்து மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வாரா..?” எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.
வானதியின் இந்தக் கருத்து பலரிடையே விவாதப்பொருளானது. அதைத் தொடர்ந்து விகடன் வலைதளப் பக்கத்தில், வானதியின் கூற்று தொடர்பாக வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் வானதியின் கூற்று `சரியான வாதம், பொருத்தமற்ற வாதம், வாழ்த்துவது தனிப்பட்ட உரிமை’ என மூன்று விருப்பங்கள் கொடுக்கப்பட்டன.
இந்த நிலையில், விகடனின் கருத்துக்கணிப்பு முடிவில், 56 சதவிகிதம் பேர் `வானதி கூறியது சரியான வாதம்’ என்பதைத் தேர்வு செய்திருக்கின்றனர். மேலும், 27 சதவிகிதம் பேர் `வாழ்த்துவது தனிப்பட்ட உரிமை’ என்பதையும், 17 சதவிகிதம் பேர் `பொருத்தமற்ற வாதம்’ என்பதையும் தேர்வுசெய்திருக்கின்றனர்.
கரன்ட் கருத்துக்கணிப்பு… உடனே பங்குபெறுங்க !
இன்று சட்டமன்றத்தில் அரசு தயார்செய்த உரையில் சிலவற்றை ஆளுநர் ஆர்.என்.ரவி தன் உரையின்போது வாசிக்காமல் தவிர்த்ததும், அவையிலிருந்து பாதியிலேயே வெளியேறியதும் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆளுநரின் இந்தச் செயல் தொடர்பாக விகடன் வலைதளப் பக்கத்தில் தற்போது கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுவருகிறது.
இந்தக் கருத்துக்கணிப்பில், `அரசு தயாரித்த ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகிய தலைவர்களின் பெயர்களைத் தவிர்த்துவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்தது…’
`விதிகளை மீறியது’
`ஆளுநருக்கு உரிமை உண்டு’
`அரசுடனான மோதலின் வெளிப்பாடு’
என மூன்று விருப்பத் தேர்வுகளை அளித்திருக்கிறோம்.
கருத்துக்கணிப்பில் பங்குபெற கீழுள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்;