இலவச டீசல் விநியோகம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு


சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட டீசல் தொகை இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த டீசல் நெல் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சீன அரசாங்கம் 10.06 மில்லியன் லீற்றர் டீசலை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, நாட்டில் விவசாயம் மற்றும் மீன்பிடியில் ஈடுபடும் மக்களுக்காக இந்த டீசல் வழங்கப்பட்டுள்ளது.

இலவச டீசல் விநியோகம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு | Free Diesel Distribution By Ministry Sri Lanka

இலவச எரிபொருள் விநியோகம்

இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எம்.எச்.எல்.அபேரத்ன கூறுகையில், நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் விநியோகத்தை இன்று முதல் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இணையவழியில் விசேட வவுச்சர் ஊடாக ஒவ்வொரு விவசாயிக்கும் எரிபொருள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த வவுச்சரின் உத்தியோகபூர்வ வெளியீடு இன்று முற்பகல் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடத்தப்படவுள்ளது.

இலவச டீசல் விநியோகம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு | Free Diesel Distribution By Ministry Sri Lanka

மேலும், அறுவடை நடவடிக்கைகளுக்காக விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 15 லீற்றர் டீசலும், 2 ஹெக்டேயருக்கு 30 லீற்றர் டீசலும் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.