சொந்த படைகளை சுட்டுக் கொல்லும் ரஷ்யா: போரில் இருந்து வீரர்கள் தப்பி ஓட்டம்


உக்ரைன் மீதான போர் தாக்குதலில் இருந்து தப்பி ஓட நினைக்கும் எந்தவொரு ராணுவ துருப்புகளையும் ரஷ்யா சுட்டு வீழ்த்தி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

சொந்த படைகளை சுட்டு வீழ்த்தும் ரஷ்யா

உக்ரைன் மீதான ஜனாதிபதி விளாடிமிர் புடினின் சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவளிக்காத எந்தவொரு துருப்புக்களையும் சுட்டுக் கொல்ல Rosgvardia படை அல்லது தேசிய காவலர் பயன்படுத்தப்படுவதாக உக்ரைன் பொதுப் பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய இராணுவ ஒழுக்கத்தைப் பேணவும், பணியாளர்களிடையே பீதி பரவுவதை தடுக்கவும்” போரை விட்டு வெளியேற அல்லது உக்ரைனியப் படைகளிடம் சரணடையத் திட்டமிடும் எந்தவொரு துருப்புக்களையும் ரஷ்யா சுட்டு வீழ்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொந்த படைகளை சுட்டுக் கொல்லும் ரஷ்யா: போரில் இருந்து வீரர்கள் தப்பி ஓட்டம் | Russia Killing Its Own Troops Amid They Try Flee(AFP via Getty Images)

உக்ரைனிய பொதுப் பணியாளர்களின் அறிக்கைகளின் அடிப்படையில், உக்ரைனில் போரை கைவிட எண்ணிய ஆறு படைவீரர்களை ரோஸ்க்வார்டியா துருப்புக்கள் சுட்டுக் கொன்றதாக தெரியவந்துள்ளது.

உக்ரைனின் கூற்றுப்படி பிப்ரவரி 24, 2022 அன்று போர் தொடங்கியதிலிருந்து புடினின் ராணுவம் 111,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரோஸ்க்வார்டியா துருப்புக்கள்

ரோஸ்க்வார்டியா என்பது ரஷ்யாவின் சிறப்பு பொலிஸ் பிரிவு இது இராணுவத்திலிருந்து தனித்தனியாக உள்ளது,மேலும் இவை கிளர்ச்சிக்கு எதிரான பணிகளில் பயிற்சி பெற்றுள்ளது மற்றும் முன்னேறும் துருப்புகளுக்கு பின்னால் செயல்படுகிறது.

சொந்த படைகளை சுட்டுக் கொல்லும் ரஷ்யா: போரில் இருந்து வீரர்கள் தப்பி ஓட்டம் | Russia Killing Its Own Troops Amid They Try Flee(AFP via Getty Images)

கடந்த ஆண்டு இறுதியில் பிரித்தானிய உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், போர்க்களத்தில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் எந்த ரஷ்ய துருப்புக்களுக்கும் தடையாக செயல்பட ரோஸ்க்வார்டியா துருப்புக்கள் “தடை வீரர்களாக” பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சொந்த படைகளை சுட்டுக் கொல்லும் ரஷ்யா: போரில் இருந்து வீரர்கள் தப்பி ஓட்டம் | Russia Killing Its Own Troops Amid They Try Flee(Anadolu Agency via Getty Images)



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.