வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : டில்லியில் பெருகி வாகனங்களால், காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து பிஎஸ்.-3, மற்றும் பிஎஸ்.,-4 வாகனங்களுக்கு தடை விதித்து அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
பி.எஸ்., என்பது, ‘பாரத் ஸ்டேஜ்’ என்பதின் சுருக்கம். வாகனங்கள் வெளியிடும் புகையால், மாசு ஏற்படுவதை தடுக்க, இந்தியாவில், 2000ம் ஆண்டில் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த, 2017 ஏப்ரல் முதல், நாடு முழுதும், பி.எஸ்., – 4 வாகனங்கள் மட்டுமே, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில் டில்லியில் காற்று மாசு அளவு 434 வரை தாண்டியுள்ளதையடுத்து டில்லி அரசு இன்று பிறப்பித்த உத்தரவில், பிஎஸ்.3 பெட்ரோல் வாகனங்களுக்கும், பிஎஸ்.-4 டீசல் வாகனங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவு தற்காலிகமானது தான் எனவும், கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement