திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி பகுதிக்கு அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் வேதநாயகி ராஜேஷ் எனும் தம்பதி வசித்து வருகிறனர். சில ஆண்டுகளுக்கு முன்புதான் இவர்களுக்கே திருமணம் ஆனது.
இதில் அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. வேதநாயகி வீட்டில் குழந்தைகள் விளையாட விட்டுவிட்டு வீட்டு வேலை செய்வது வழக்கம். இத்தகைய நிலையில் நேற்று முன் தினம் குழந்தை தனியாக வீட்டில் விளையாடி கொண்டு இருந்தது.
அப்போது சிறிது நேரத்தில் குழந்தை கதறி கதறி அழுதது. சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்து பார்த்தனர். இருந்தும் சமாதானம் ஆகாத அந்த குழந்தை விடாமல் அழுதது.
அப்போது சிறிது நேரத்திலேயே குழந்தை கதறி அழுததால் என்னவேன்று பெற்றோர் ஓடி வந்து பார்த்துள்ளனர். குழந்தையை தூக்கி சமாதானம் செய்ய முயன்றும் சமாதானம் ஆகாத குழந்தைஅப்போது வீட்டு வாசலில் வண்டு போல ஒரு பூச்சியை அவர்கள் கண்டுள்ளனர்.
இதனால் பதட்டம் அடைந்தவர்கள் உடனே குழந்தையை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது மயங்கிய அந்த குழந்தையை கண்ட மருத்துவர்கள் உடனே பரிசோதனை செய்தனர்.
அவர்கள் உடனே தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்தனர். அங்கே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. விஷ பூச்சி கடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.