தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன் அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12,000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000, முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ,18,000 என தொகுப்பூதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் உள்ள சுமார் 14,000 ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் மற்றும் தொகுப்பூதியம் வழங்க ரூ.109 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வரும் கல்வி ஆண்டில் தமிழக முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.