புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என ஒன்றிய அரசு கணித்திருந்த நிலையில், தனிநபர் ஆண்டு வருமானம் 7 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதனையொட்டி, வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி கலந்து ஆலோசனை நடத்த உள்ளார். இதன்போது, எந்த துறைகள் மீதான பொருளாதார வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.