பரபரப்பான சட்டப்பேரவை: ஆளுநர் வாசிக்க மறுத்த 65-வது பத்தியில் இருந்த வார்த்தைகள் என்னென்ன?

சென்னை: சட்டப்பேரவை முதல் கூட்டத்திற்காக தமிழக அரசு தயார் செய்து கொடுத்த உரையில் உள்ள 65-வது பத்தியை ஆளுநர் வாசிக்க மறுத்துவிட்டதாக தெரியவந்துள்ளது. அதில், ‘சமூக நீதி’ முதல் ‘திராவிட மாடல் ஆட்சி’ வரை 10-க்கும் மேற்பட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜன.9) காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு கூட்ட அரங்கில் ஆளுநர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். இதன்படி காலை.10.50 மணி வரை ஆளுநர் தனது உரையை வாசித்தார். உரை வாசித்து முடிக்கப்பட்டதும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.

இதன்பிறகு பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். அவர் பேசுகையில்,”தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது” என்று தெரிவித்து இது தொடர்பான தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் சட்டப்பேரைவில் ஓருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ஆளுநர் உரையில் உள்ள 65-வது பத்தியை ஆளுநர் வாசிக்க மறுத்துவிட்டதாக தெரியவந்துள்ளது. இந்தப் பத்தியில் இருந்த வார்த்தைகள்:

  • சமூகநீ்தி
  • சுயமரியாதை
  • அனைவரையும் உள்ளடக்கியவளர்ச்சி சமத்துவம்
  • பெண்ணுரிமை
  • மதநல்லிணக்கம்
  • பல்லுயிர் ஓம்புதல்
  • பெரியார்
  • அண்ணல் அம்பேத்கர்
  • பெருந்தலைவர் காமராசர்
  • பேரறிஞர் அண்ணா
  • முத்தமிழறிஞர் கலைஞர்
  • திராவிட மாடல் ஆட்சி

மேலும் தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்ற வார்த்தையும் ஆளுநர் வாசிக்க மறுத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.