விமான பயணி ஒருவரின் கேரி-ஆன் பையில் “போவா கன்ஸ்டிரிக்டர் பாம்பு” ஒன்று சுருண்டு இருந்தை அமெரிக்காவின் விமான நிலைய அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர்.
விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி
அமெரிக்காவின் தம்பா சர்வதேச விமான நிலையத்தில் பெண் ஒருவர் தன்னுடைய கேரி-ஆன் பையில் 4 அடி நீள போவா கன்ஸ்டிரிக்டர் பாம்பை(Boa Constrictor Snake) சுருட்டி கொண்டு வந்து இருந்ததை விமான நிலைய அதிகாரிகள் கண்டுப்பிடித்தனர்.
கடந்த டிசம்பர் 15 திகதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம்(TSA) சமூக வலைதள பக்கத்தில் x-ray புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, விமான பயணி ஒருவர் தன்னுடன் போவா பாம்பை கேரி-ஆன் பேக்கில் வைத்து கொண்டு வந்ததை விமான நிலைய அதிகாரிகள் கண்டுப்பிடித்து, அதை விமான பயணத்தில் கொண்டு செல்ல மறுப்பு தெரிவித்தனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் விமான போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம்(TSA) பயணிகள் செல்ல பிராணிகளை விமான நிலையத்திற்கு கொண்டு வருவதற்கு முன்னதாக விதிமுறைகளை நன்றாக பார்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் கேரி-ஆன் பைகளில் பாம்புகள் கொண்டு வருவது அனுமதிக்கப்படுவது இல்லை என்று குறிப்பிட்டுள்ளது, அத்துடன் சில விமான நிறுவனங்கள் பாதுகாப்பான பார்சல் அமைப்புகள் இருந்தால் இதனை அனுமதிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
உணர்வு ஆதரவு செல்லப்பிராணி
இந்நிலையில் cbs செய்தி நிறுவனம் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பேசியதில், 4 அடி நீளம் கொண்ட போவா கன்ஸ்டிரிக்டர் பாம்பு “பர்த்தலோமிவ்” (Bartholomew) என்று அழைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
“பர்த்தலோமிவ்” தன்னுடைய உணர்வு ஆதரவு செல்லப்பிராணி என்று அந்த பெண் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த போவா கன்ஸ்டிரிக்டர்கள் விஷமற்ற பாம்புகள், இருப்பினும், அவை தங்கள் இரையை அவற்றின் வலுவான சுருள்களில் அழுத்துவதன் மூலம் கொல்லும் திறன் கொண்டது.