மயிலாடுதுறை: மயிலாடுதுறை மயூரநாதர் கோயிளுக்கு யானை கொண்டுவரப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதை பக்தர்கள் விமர்சையாக பொன்விழா எடுத்து கொண்டாடினர். விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய இந்த விழாவில் காவிரியில் இருந்து புனித நீர் யானை மீது வைத்து எடுத்து வரப்பட்டுள்ளது. யானைக்கு தீபாராதனை செய்து வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் தேவார பாடல் பெற்ற பழமை வாய்ந்த மயூரநாதர் கோயிளுக்கு அபயாம்பிகை யானை 1972ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
இதன் பொன்விழா ஆண்டு கொண்டாடபடுவதை அடுத்து யானைக்கு பிடித்த உணவுகள் அளிக்கபட்டன. தொடர்ந்து அலங்காரப்படுத்தப்பட்ட அபயாம்பிகை யானையின் மீது பன்னிரு திருமுறைகளை வைத்து தேவார பாசுரங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்துவரப்பட்டது. முன்னதாக கோயிலுக்கு வந்த பக்தர்கள் யானையிடம் ஆசிர்வாதம் பெற்றும் அதனுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.