அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தனது நாட்டுப் படைகளுக்கு உத்தரவிட்டார்.
இதை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்தப் போர் இன்னனும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன.
ரஷ்யா படையெடுப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. 300 நாட்கள் கடந்த நிலையில் முதன் முறையாக கடந்த டிசம்பர் 21ம் தேதி அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையை அடைந்ததும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பிடனைச் சந்தித்து, உக்ரைனுக்கு அதிக ஆயுதம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த குளிர்காலத்தில் உக்ரைனின் ஆற்றல் மையங்கள் மற்றும் நீர் வளங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அதை சமாளிக்க ஆயுதம் வேண்டும் என கோரிக்கை விடுத்ததார்.
பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறும்போது, ’‘நீங்கள் கொடுக்கும் நிதியுதவி வெறும் தானம் என்று நினைக்காதீர்கள், இது முதலீடு. இது ஜனநாயகம், பாதுகாப்புக்கான முதலீடு. இந்த அவையில் நான் உரையாற்றுவது பெருமைக்குரியது.
எல்லா பிரச்னைகளுக்கும் இடையே உக்ரைன் வீழவில்லை. உக்ரைன் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. பதிலடி கொடுக்கிறது. அதிபர் பைடன் எங்களுக்கு துணை நிற்பதில் மகிழ்ச்சி. உக்ரைன் ஒருபோதும் ரஷ்யாவிடம் சரணடையாது’’ இவ்வாறு அவர் கூறினார்.
பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை மாநகராட்சி மேயர் அன்பழகன் வழங்கினார்.
இந்தநிலையில் உக்ரைனுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. பல வகையான நவீன ஆயுதங்கள் அடங்கிய தொகுப்பை அமெரிக்கா வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் ஜெர்மனியும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் பிரான்ஸ் நாடும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தை; ரஷ்ய அதிபர் கண்டிஷன்.!
இந்தநிலையில் மேற்கத்திய நாடுகள் வழங்கும் இத்தகைய ஆயுதங்களால் அதிகம் பாதிக்கப்பட போவது உக்ரேனியர்கள் தான் என ரஷ்யா தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும்போது, ‘‘ மேற்கத்திய நாடுகள் வழங்கும் இத்தகைய ஆயுதங்களால் உக்ரைனில் எந்தவித மாற்றங்களும் நிகழப் போவதில்லை. மாறாக உக்ரைன் மக்கள் அதிக கொடுமைகளை அனுபவிக்க இத்தகைய ஆயுதங்கள் வழிவகுக்கும்’’ என அவர் தெரிவித்தார்.