மும்பை: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கடன் மோசடி வழக்கில் சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகிய இருவரையும் ஜாமீனில் விடுதலை செய்ய மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியான, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் நடந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. மின்னணு சாதனங்கள் உட்பட வீட்டு உபயோகப் பொருட்களை தயாரிக்கும் வீடியோகான் நிறுவனத்துக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கடன் அளித்து இருந்தது. இதில், பல மோசடிகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, ஐசிஐசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளர்.
இந்நிலையில் சாந்தா கோச்சார் மற்றும் தீபக் கோச்சார் ஜாமின் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த ஜாமின் மனு மீதான வழக்கின் விசாரணை இன்று(ஜன.,09) விசாரணைக்கு வந்தது. அப்போது சாந்தா கோச்சார் தரப்பு வழக்கறிஞர் தவறாக கைது செய்யப்பட்டுள்ளனர் என வாதிட்டார்.
இதையடுத்து சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகிய இருவரையும் ஜாமினில் விடுதலை செய்ய மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களின் மகனிற்கு வரும் ஜன.,15ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement