விற்பனையில் உள்ள தார் 4×4 டிரைவ் எஸ்யூவி காருடன் கூடுதலாக ஆஃப் ரோடு சாகசங்கள் விரும்பாதவர்களுக்கு என மஹிந்திரா தார் 4X2 ரியர் வீல் டிரைவ் மாடல் ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக விலை சலுகை முதலில் முன்பதிவை மேற்கொள்ளும் 10,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4×4 டிரைவ் வகையை விட விலை ரூ. 3.60 லட்சம் மலிவானது. மஹிந்திரா RWD வகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது சாலைக்கு வெளியே ஆஃப் ரோடு சாகசங்களை விரும்பாதவர்களை இலக்காகக் கொண்டது.
RWD தார் எஸ்யூவி காரில் உள்ள புதிய 1.5 லிட்டர் D117 CRDe டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 117 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. RWD பெட்ரோல் வேரியண்ட் 2.0-லிட்டர் டர்போ mStallion 150 TGDi இன்ஜின் வழங்கப்பட்டு 150 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்து. இதில் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வந்துள்ளது.
Thar 4×4 மேம்பாடு
அனைத்து 4WD டிரிம்களுக்கும் போஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட எலக்ட்ரானிக் பிரேக் லாக்கிங் டிஃபெரென்ஷியலை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது, LX டீசல் 4WD வகைகளில் மெக்கானிக்கல் லாக்கிங் டிஃபெரன்ஷியல் கிடைக்கிறது.
பிளேசிங் பிரான்ஸ் மற்றும் எவரெஸ்ட் ஓயிட் என இரு பதிய நிறங்களுடன் வெவ்வேறு வடிவமைப்புகளில் வெளிப்புற மற்றும் உட்புற பேக்குகளுடன் வருகிறது. முன் மற்றும் பின்புற ஆர்ம்ரெஸ்ட்டையும் பெறுகிறது.
2023 MAHINDRA THAR PRICES
MAHINDRA THAR PRICES | |||
---|---|---|---|
2WD variants | Price | 4WD variants | Price |
1.5-diesel MT AX(O) | Rs 9.99 lakh | 2.0-petrol MT AX(O) | Rs 13.59 lakh |
1.5-diesel MT LX | Rs 10.99 lakh | 2.2-diesel MT AX(O) | Rs 14.16 lakh |
2.0-petrol AT LX | Rs 13.49 lakh | 2.0-petrol MT LX | Rs 14.28 lakh |
– | – | 2.2-diesel MT LX | Rs 14.87 lakh |
– | – | 2.0-petrol AT LX | Rs 15.82 lakh |
– | – | 2.2-diesel AT LX | Rs 16.29 lakh |