மதுரை: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையாக ரூ.5.55 காசுகளில் இருந்து 10 காசுகள் உயர்த்தி ரூ.5.65 ஆக விலை நிர்ணயம் செய்து, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நேற்று முன்தினம் இரவு அறிவித்தது. வட மாநிலங்களில் குளிர் நிலவுவதால் அங்கு முட்டையின் நுகர்வும், விற்பனையும் அதிகரித்துள்ளன. அரபு நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்நிலையில் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் சென்னையிலும் சில்லரை கடைகளில் ஒரு முட்டை ரூ.6.50க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.இதனால் ஆம்லேட் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.