அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த கேரன் ட்ராய் என்ற இதய வடிவ கருப்பை கொண்ட பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
500 மில்லியனில் ஒருவர்
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்த கேரன் ட்ராய்(25) என்ற பெண்மணி கடந்த ஜனவரி 2021ம் ஆண்டு கருவுற்றதை அறிந்து சந்தோஷத்தில் இருந்த நிலையில், 2021ம் ஆண்டு மார்ச் மாதம் மருத்துவர்கள் கேரன் ட்ராய்-க்கு அதிர்ச்சியான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர்.
அதில் கேரனின் கருப்பையானது இதய வடிவில் இருப்பதாகவும், அவற்றில் இரட்டைக்கரு உருவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே இதய வடிவ கருப்பை இருக்கும் நிலையில், 500 மில்லியன் பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்த இதயவடிவ கருப்பையில் இரட்டை குழந்தைகள் உருவாகும் அரிய நிகழ்வு என்று தெரிவித்துள்ளனர்.
உணர்ச்சிகரமாக உணர்கிறேன்
எனக்கு இதய வடிவ கருப்பை இருந்தது என்பதை விட, எனக்கு இரட்டை குழந்தைகள் உருவாகி இருந்தது அதிக கவலை அளித்தது. முதலில் குழந்தைகள் நலமாக இருக்கிறார்களா என்பதை மட்டுமே உறுதி செய்துகொண்டேன்.
இது ரிஸ்க்கான கர்ப்பம் என்பதால் மருத்துவர்கள் என் மீது சிறப்பு கவனம் எடுத்து கொண்டனர், முதல் 34 நான்கு வாரங்கள் நன்றாகவே இருந்தேன், ஆனால் pre-eclampsia என்ற உயர் ரத்த அழுத்த நிலை ஏற்பட்டதால் குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டனர்.
இதன்மூலம் ரேயான் மற்றும் ரேலின் ஆகிய இருவரும் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி பிறந்தனர். குழந்தைகளுக்கு உணவு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க சுமார் 27 நாட்கள் NICU-வில் வைக்கப்பட்டிருந்தனர்.
முதன் முதலில் குழந்தைகள் குட்டியாக இருந்ததை பார்த்து உணர்ச்சிகரமாக உணர்ந்தேன், பின் குட்டி குழந்தைகளை நினைத்து சற்று பயந்தேன் என கேரின் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது இரட்டை குழந்தைகளுக்கு 16 மாதங்கள் ஆகிறது, இருவரும் நலமாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.