Motorola நிறுவனம் சமீபகாலமாக Android ஸ்மார்ட்போன் விற்பனையில் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. குறிப்பாக பட்ஜெட் மற்றும் பிரீமியம் என்ட்ரி லெவல் செக்மென்ட்டில் பல புதிய வசதிகளுடன் போன்களை அறிமுகம் செய்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது.
தற்போது ஸ்மார்ட்போன் துறையில் புதிய புரட்சியாக இருக்கக்கூடிய SOS எனப்படும் Satellite வசதியை ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 14 ப்ரோ மாடலில் அறிமுகம் செய்தது. இந்த வசதி மிகப்பெரிய அளவு உலகம் முழுவதும் பேசப்பட்டுவருகிறது.
இதே வசதியை தற்போது Motorola நிறுவனம் Android போன்களில் முதல் முதலாக இந்த SOS வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. Defy rugged Smartphone ஒன்றை 2023 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளது. இதற்காகவே Bullitt எனும் Satellite Connectivity நிறுவனத்துடன் இணைந்து செய்யவுள்ளது.
இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டால் Android Ecosystem உள்ளே இடம்பெறும் முதல் SOS வசதி ஆகும். இதற்காகவே Bullitt Satellite Connect எனும் செயற்கைகோள் மெசேஜிங் சேவை நிறுவனத்துடன் இணைந்து இந்த வசதியை அதன் மோட்டோரோலா போன்களில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் பயனர்கள் செயற்கைகோள் மூலம் மெசேஜ் அனுப்பவும் திரும்ப பெறவும் முடியும்.
இந்த வசதியை பயன்படுத்த தனியாக நமக்கு மொபைல் டேட்டா அல்லது Wi-Fi கனெக்ஷன் வசதி இல்லாமல் பயன்படுத்தலாம். இந்த வசதி முதலில் அதன் Motorola Defy Rugged 5G ஸ்மார்ட்போனில் வெளியாகும்.
இந்த வசதியை பயன்படுத்த Motorola ஸ்மார்ட்போன் பயனர்கள் அவர்களின் போனில் Bullitt Satellite Messenger App Download செய்யவேண்டும். முதலில் இந்த ஆப் மூலம் Text message, Emoji போன்றவற்றை மட்டுமே அனுப்பமுடியும்.
அடுத்ததாக இதில் நாம் Images, Audio, Video போன்ற வசதிகள் அறிமுகம் செய்யப்படும். இதே Bullitt App வைத்திருக்கும் மற்ற Android மற்றும் iOS பயனர்களால் இந்த ஆப் மூலம் வரும் மெசேஜ் பார்க்கவும் அதற்கு பதில் அளிக்கவும் முடியும். இந்த ஆப் இல்லாதவர்களுக்கு SMS மூலம் மெசேஜ் கிடைக்கும்.
Satellite வசதி இல்லாத போன்களில் இந்த வசதியை நாம் Wi-fi மற்றும் Data மூலம் பயன்படுத்தலாம். இந்த வசதி படிப்படியாக வெளியிடப்படும் என்றும் முதலில் இந்த வசதி ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் வெளியாகும். பின்னர் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ஆசியாவில் உள்ள மற்ற நாடுகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்