முஜாபர்நகர், உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாகதுப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை தயாரித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
உ.பி., யில் உள்ள முஜாபர்நகர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக சிலர் ஆயுதங்கள் தயாரிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இங்குள்ள பாவ்டி கிராமத்தில் போலீசார் நேற்று அதிரடிச் சோதனை நடத்தினர்.
அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் நாட்டுத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை தயாரித்து, கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
தப்பியோடிய மற்றொரு நபரை தேடி வரும் போலீசார், ஆயுத தொழிற்சாலையில் இருந்து, 12 நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களைபறிமுதல் செய்தனர்.
விசாரணையில், சட்டவிரோதமாக தயாரித்த ஆயுதங்களை, உ.பி., மற்றும் ஹரியானா எல்லைகள் வழியாக அவர்கள் கடத்தி, விற்பனை செய்தது தெரியவந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement