இந்தியா-இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் 98 ஓட்டங்களுடன் சதமடிக்க காத்து இருந்த இலங்கை வீரர் தசுன் ஷனகா-வை மன்கட் முறைப்படி வெளியேற்ற முயன்ற இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி-யின் செயலை கேப்டன் ரோகித் சர்மா பின்வாங்கியது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை வருகின்றனர்.
மாண்பை காத்த ரோகித் சர்மா
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 373 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய இலங்கை அணியில் கேப்டன் தசுன் ஷனகா 88 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் விளாசி 108 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
ஆனால் இந்த போட்டியில் இலங்கை வீரர் தசுன் ஷனகா தனது சதத்தை பூர்த்தி செய்ய முடியாமல் வெளியேறி இருக்கும் நிலையும் ஏற்பட்டது, இருப்பினும் இந்திய அணியின் கேப்டன் மாண்புடன் செயல்பட்டு தசுன் ஷனகாவின் விக்கெட் கோரிக்கையை பின்வாங்கினார்.
மன்கட் முறை
ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசினார், ஆட்டத்தின் 49. 3வது ஓவரில் துடுப்பாட்ட முனையில் இலங்கை வீரர் கசுன் ராஜித 4 ஓட்டங்களுடனும், எதிர்முனையில் தசுன் ஷனகா 98 ஓட்டங்களுடனும் இருந்தனர்.
அப்போது 98 ஓட்டங்களுடன் சதத்திற்காக காத்து இருந்த தசுன் ஷனகா-வை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மன்கட் முறைப்படி அவுட் செய்து அதற்கான வேண்டுகோளை நடுவரிடம் கோரினார்.
Indian Captain Rohit Sharma withdrew the run-out appeal of Dasun Shanaka’s while on 98 runs.
Great sportsman spirit❤️@ImRo45 🇱🇰 ❤️ 🇮🇳 pic.twitter.com/t0VGmhFNXs #LKA #SriLanka #sportsmanship #INDvSL #RohitSharma
— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) January 10, 2023
உடனடியாக தீர்ப்பு மூன்றாவது நடுவரிடம் சென்ற நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உடனடியாக தலையிட்டு மன்கட் அவுட் கோரிக்கையை பின்வாங்குவதாக அறிவித்தார்.
இதையடுத்து முகமது ஷமி-யும் தனது கோரிக்கையை நடுவரிடம் இருந்து பின்வாங்கினார், இந்நிலையில் ரோகித் சர்மாவின் இந்த செயல் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.