புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் புதிய மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டு வரும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா பேசியதாவது:
ஒவ்வொரு நாடும் இந்தியாவை தற்போது உற்று நோக்குகிறது. நமது கரோனா கட்டுப்பாட்டு பணிகள் இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. நான் உலகில் பல நாடுகளுக்கு சென்று வந்தேன். உலகின் பிற நாடுகளை விட இந்தியாவில் கரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாறு அதார் பூனாவாலா கூறினார்.
இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 170 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மத்தியபிரதேசத்தில் மட்டும் ஒருவர் உயிரிழந்தார் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று தகவல் வெளியிட்டது.