புதுடில்லி : பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் உள்ள ஒன்பது நீதிபதிகளை, தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்ச நீதிமன்ற ‘கொலீஜியம்’ மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதிகளை தேர்வு செய்கிறது.
இதன்படி இன்று நடந்த கொலீஜியம் ஆலோசனை கூட்டத்திற்கு பின் மும்பை, மணிப்பூர், கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் 9 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement