வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-‘உண்மையான சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம் என்பது குறித்த வழக்கின் விசாரணை பிப்.14-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடக்கிறது.
மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரு அணிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ‘ எங்களைத் தான் உண்மையான சிவசேனா என அறிவிக்க வேண்டும்’ என, ஏக்நாத் ஷிண்டே தரப்பு, தலைமை தேர்தல் ஆணையத்தில் சில ஆவணங்களை தாக்கல் செய்து மனு அளித்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா அமைப்பு தாக்கல் செய்த வழக்கு பல கட்ட விசாரணைக்கு பின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. அப்போது மொத்தம் 55 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் ஷிண்டே தரப்பிற்கு 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து உத்தவ் தரப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கு வரும் பிப்.14-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement