ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல் நாட்டில் காப்ரீன் Kaffrine பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் நெடுஞ்சாலையில் எதிரே வந்த மற்றொரு பஸ் மீது மோதி இந்த விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிமை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 2 பஸ்களும் பலத்த சேதமடைந்த நிலையில், இதில் பயணித்த 40 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 87 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சம்ப இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு செனகல் நாட்டு ஜனாதிபதி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். விபத்தில் 40 பேர் இறந்தது கவலை அளிக்கிறது. காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன். 3 நாட்கள் நாடு முழுவதும் துக்கம் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.