சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது அமைச்சராக இருந்த திமுக எம்.பி. ராஜா, வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும், சொத்துக்களை பினாமி பெயரில் வாங்கி குவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ கடந்த 2015ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கு தொடர்பாக சில முறை ரெய்டு நடைபெற்ற […]