நாசாவில் இந்திய வம்சாவளி நிபுணர் உயர்பதவியில் நியமனம்| Appointed to senior post of Indian-origin specialist at NASA

வாஷிங்டன்: நாசாவின் புதிய தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளித் துறை நிபுணர் ஏசி சரனியா நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தலைமையகத்தில் தொழில்நுட்ப கொள்கை மற்றும் திட்டங்களில் நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் உள்ளார். இவருக்கு ஆலோசகராகவும் தொழில்நுட்ப நிபுணராகவும், இந்திய வம்சாவளி விண்வெளியைச் சேர்ந்த ஏ.சி. சரணியா நியமிக்கப்படடுள்ளார்.

இவர் விண்வெளி பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார். நாசாவில் இணைவதற்கு முன்பு, சான்றிதழ் பெற்ற தனியார் விண்வெளி நிறுவனமான ரோபோடிக்ஸ் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றியுள்ளார். இது தவிர விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு முக்கிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.