திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஜோலார்பேட்டை அருகே அடியத்தூர் பகுதியில் வசித்து வரும் 45 வயதான திருப்பதி என்பவர் கட்டிட தொழில் வேலை செய்து வந்துள்ளார். ரயில் முன் பாய்ந்து நேற்று முன்தினம் உயிரை விட்டார்.
போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்கொலைக்கு முன்பாக திருப்பதி வெளியிட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாகி போலீசாரின் கவனத்திற்கு வந்துள்ளது.
அந்த வீடியோவில் தற்கொலைக்கு முன் பேசிய திருப்பதி, “பெரிய மூக்கனூர் கிராமத்தில் வசிக்கும் மோகன் மோகனா என்ற தம்பதி என்னை சிங்காரம் என்பவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். எனக்கே தெரியாமல் அவர்களிடம் நான் ஒரு இ.பி ஆபிசர் என்று கூறி வைத்துள்ளார்கள். என் பெயரைச் சொல்லி அவர்களிடம் 85 ஆயிரம் பணம் பெற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சிங்காரத்தின் குடும்பத்தினர் எனக்கு போன் செய்து மிரட்டினார்கள். அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று நான் வாங்காத 85 ஆயிரம் கடனை தரச் சொல்லி மிரட்டினார்கள். அந்த மோகன் மோகனா தம்பதி மூன்று மாடி மெத்தை வீடு கார் உள்ளிட்டவை என்னிடம் இருப்பதாக கூறியுள்ளார்கள்.
என்னிடம் எதுவுமே இல்லை காலை 6 மணிக்கு வேலைக்கு சென்றாள் மாலை 6:00 மணிக்கு தான் வீட்டிற்கு வருகிறேன். என் செல்போனில் ஆதாரங்கள் இருக்கின்றன. பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். என் வண்டியையும் பிரிந்து விட்டார்கள். நான் நல்லவன் என்பதை ஊர் மக்களிடம் போலீசார் நிரூபிக்க வேண்டும்.
எனக்கு சாக பயமாகத்தான் இருக்கிறது ஆனால் ஊருக்கு உன்னை தெரிய வேண்டும்.” என்று அழுது கொண்டே அவர் பேசியுள்ளார். இது குறித்து போலீசார் ஐந்து பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.