பள்ளியில் அரசியரை துப்பாக்கியால் சுட்ட 6 வயது குழந்தை: அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம்


அமெரிக்காவில் 6 வயது சிறுவன் பள்ளிக்கு துப்பாக்கியை எடுத்துவந்து ஆசிரியரை சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ் பகுதியில் உள்ள ரிச்நெக் தொடக்கப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

வீட்டிலிருந்து தனது புத்தகப்பையில் கைத்துப்பாக்கியை மறைத்து வைத்து பள்ளிக்கு எடுத்துவந்த ஆறு வயது மாணவன், தனது ஆசிரியரை சுட்டான்.

25 வயதான பெண் ஆசிரியர் ஸ்வெர்னர் (Abby Zwerner), சிறுவனால் சுடப்பட்டதில் காயமடைந்து, மயங்கி விழுவதற்கு முன், தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் உதவி கேட்குமாறு கெஞ்சினார்.

பள்ளியில் அரசியரை துப்பாக்கியால் சுட்ட 6 வயது குழந்தை: அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம் | Us Teacher Shot By 6 Year Old StudentABBY ZWERNER/FACEBOOK

“நான் சுடப்பட்டேன், நான் சுடப்பட்டேன், 911 ஐ அழைக்கவும்” என்று ஸ்வெர்னர் கதறியதாக, நேரில் கண்ட சாட்சியான லாவாண்டா ரஸ்க் கூறினார் .

சம்பவம் நடந்தபோது அங்கிருந்த ரஸ்க், மாணவர் ஆசிரியரை சுடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தனது இரண்டு பேரன்களை அழைத்துச் செல்ல பள்ளிக்கு வந்ததாகவும், பின்னர் பலத்த காயமடைந்த ஸ்வெர்னரை வரவேற்பாளருடன் சென்று பார்த்ததாகவும் கூறினார்.

“அவர் தரையில் விழுந்துகிடந்தார், மற்றொரு துப்பாக்கிச் சூடுக் காயம் இருப்பதை நாங்கள் கவனித்தோம். காயங்கள் மீது அழுத்தம் கொடுக்க நான் உதவினேன்,” என்று ரஸ்க் கூறினார்.

இப்போது, ஆசிரியையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளி தனது இணையதளத்தில் கூறியுள்ளது, மேலும் அவர் தனது குடும்பத்தினரிடம் பேசி வருகிறார்.

ஒரு ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், வேறு எந்த மாணவரும் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். குழந்தைக்கு எப்போது ஆயுதம் கிடைத்தது என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்வெர்னர் அவரது கையிலும் அவரது மேல் மார்பிலும் சுடப்பட்டிருந்தார். உதவிக்கு அழைப்பதற்காக பள்ளியின் வரவேற்பறைக்குச் செல்வதற்கு முன், அனைத்து மாணவர்களும் வகுப்பறைக்கு வெளியே பாதுகாப்பாக இருப்பதை அவர் உறுதிசெய்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.