வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காந்திநகர்: ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து கோவா வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, விமானம் குஜராத்தின் ஜாம்நகரில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிலிருந்து இந்தியாவின் கோவா நோக்கி 236 பயணிகள், விமான பைலட்டுகளுடன் சர்வதேச விமானம் புறப்பட்டது. அப்போது நடுவானில் விமானத்திற்குள் டெிகுண்டு இருந்ததாக ரகசிய தகவல் கிடைத்து.
இதையடுத்து கோவாவில் இறங்க வேண்டிய விமானம் அவசர அவசரமாக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள சர்வதேச விமானநிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டு தரையிறக்கப்பட்டது.
அதில் 236 பயணிகள் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். தகவலறிந்த வெடிகுண்டு செயல் இழக்கச்செய்யும் நிபுணர்கள், பயங்கரவாத எதிர்ப்பு படையினர், தீயணைப்பு வானங்கள் விமானத்தில் சோதனை நடத்தினர். சோதனையில், வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement