முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு துறைமுக நகருக்கு அடிக்கடி விஜயம் செய்பவராக மாறியுள்ளதாக தெரிய வருகிறது.
காலையில் உடற்பயிற்சிக்காக கொழும்பு துறைமுக நகருக்கு மஹிந்த விஜயம் செய்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியுடன் அடிக்கடி அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் அவரது நண்பர்கள் சிலரும் செல்வதாகவும் அவர்களில் முன்னாள் அமைச்சர் பௌசியின் புதல்வர் நௌசர் பௌசியும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்தவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும், உதைபந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக கொழும்பு துறைமுக நகருக்கு அடிக்கடி சென்று வருகிறார்.
நாமல் கடந்த ஆண்டு Tabata என்ற விளையாட்டை செய்யத் தொடங்கியுள்ளார். மேலும் நாடாளுமன்றத்தில் உள்ள அவரது நண்பர்கள் மற்றும் அவர்களது மனைவிகளும் அவருடன் உடற்பயிற்சிக்காக இணைந்துள்ளர்.
இந்தப் பயிற்சிகளுக்கு நாமலுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.வி. சானக, இந்திக அனுருத்த மற்றும் சனத் நிஷாந்த ஆகியோரையும் செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் முன்னாள் ஜனாதிபதியின் துறைமுக நகரப் பயணத்தை வெளிப்படுத்தியமை அவருக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தும் முயற்சியா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை அந்தந்த பதவிகளில் இருந்து நீக்குவதற்கு சர்வதேச சக்தி பயன்படுத்தப்பட்டதாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுவும் அதன் தொடர்ச்சியான என்ற சந்தேகத்தை அரசியல் விமர்சகர்கள் எழுப்பி வருகின்றனர்.