Viral Video: குளிர்காலத்தையும் தாண்டி தலைநகர் டெல்லியில் உறைபனி உச்சியை தாக்கிவருவதால் மக்கள் வீட்டைவிட்டே வெளிவர முடியாமல் இருக்கும் சூழலில், அதன் அருகாமையில் உள்ள குருகிராம் நகரில் சூழல் வேறாக உள்ளது. குருகிராம் நகரில் மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு நடுவில், காரின் கூரையின் மேல் அமர்ந்து ஒருவர் சாதாரணமாக மது அருந்துவது (தேதி குறிப்பிடப்படாத) வீடியோவில் தெரிகிறது.
‘இதெல்லாம் குருகிராமில் மட்டுமே நடக்கும்’ என்று குறிப்பிட்ட அந்த 15 வினாடிகள் கொண்ட வீடியோவில், பின்னிருக்கையில் அமர்ந்திருக்கும் நபர் காலி பாட்டில் ஒன்றை, காரில் மேல் இருக்கும் நபரிடம் கொடுக்கிறார். அந்த பாட்டில் மது பாட்டில் என தெரிகிறது.
This can only happen in Gurgaon. pic.twitter.com/SMLBDB0bjl
— Ravi Handa (@ravihanda) January 7, 2023
அந்த வீடியோவில், அந்த நபர் ஒன்று ஏற்கெனவே மதுபோதையில் இருந்து இந்த செயலை செய்திருக்க வேண்டும் அல்லது போக்குவரத்து நெரிசலால் எரிசலடைந்து இந்த செயலை செய்திருக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலர் தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்டரில் பகிரப்பட்டதில் இருந்து வைரல் வீடியோ ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். ஆனால், இந்த வீடியோவுக்கு கலவையான எதிர்வினைகளை வந்துள்ளன. இதுபோன்ற செயல்கள் வேடிக்கையானது அல்ல என ஒரு சிலர் பதிவிட்டுள்ளனர்.
ये कौनसे शूरवीर हैं जो पुलिस स्टीकर वाली गाड़ी से लटककर पुलिस साईरन-लाल बत्ती जलाकर हाईवे पर जनता की सुरक्षा कर रहे हैं ? @Uppolice pic.twitter.com/n4GLPSOKK9
— Swati Maliwal (@SwatiJaiHind) January 9, 2023
‘ஒருமுறை காவல்துறை அந்த நபரை வெளுத்துவிட்டால், அவரின் போதை எல்லாம் போய்விடும்’ என்றும் ஒருவர் ட்விட்டரில் கருத்திட்டுள்ளார். காரில் மேல் இருக்கும் குடிகாரனின் வீடியோ யார் எடுத்தது, எங்கு எடுத்தது என உறுதியாக தெரியவில்லை. இதபோன்று, டெல்லியில் ஓடும் காரின் மீறி ஏறி ஒருவர் மது குடித்து வரும் வீடியோவும் வைரலாகி வருகிறது.