5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்பு செட்டு வாங்க மானியம் – உழவர் நலத்துறை அமைச்சர்..!

5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க, பத்தாயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என, வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களின் பழைய மின்மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்பும் விவசாயிகளும், புதிதாக ஆழ்த்துளை கிணறு, குழாய் கிணறு அல்லது திறந்தவெளி கிணறு அமைத்து, சொந்தமாக மின் இணைப்பு பெற்ற விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

5 ஆயிரம்  விவசாயிகளுக்கு மட்டுமே தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஆயிரம் பட்டியலின,  பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.