அமெரிக்காவில் மொத்தமாக ஸ்தம்பித்த விமான சேவைகள்: ஆயிரக்கணக்காண பயணிகள் தவிப்பு


அமெரிக்காவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவைகள் மொத்தமாக ஸ்தம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்தம்பித்த விமான சேவை

இதனையடுத்து, பயணிகள் தங்கள் விமான சேவை நிறுவனங்களை தொடர்புகொள்ள வேண்டும் என ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்காவில் மொத்தமாக ஸ்தம்பித்த விமான சேவைகள்: ஆயிரக்கணக்காண பயணிகள் தவிப்பு | System Outage Flights Delayed Across United States

@getty

தொழில்நுட்ப கோளாறினை சீரமைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
இந்த நிலையில், உலகெங்கிலும் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் காத்திருக்கும் நிலையில் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, புறப்பட தயாரான விமானங்கள் திடீரென்று ரத்தானதால், பல நூறு பயணிகள் விமான நிலையங்களுக்குள் சிக்கிக்கொண்டனர்.
இதுவரையான தகவலின் அடிப்படையில் 1,200 விமானங்கள் தாமதமானதாக கூறப்படுகிறது.

உள்ளூர் விமான சேவைகளும் ரத்து

மேலும் உள்ளூர் நேரப்படி பகல் 9 மணி வரையில் உள்ளூர் விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Southwest Airlines சேவைகள் 2.4% ரத்தாகியுள்ளது.

அமெரிக்காவில் மொத்தமாக ஸ்தம்பித்த விமான சேவைகள்: ஆயிரக்கணக்காண பயணிகள் தவிப்பு | System Outage Flights Delayed Across United States

@reuters

மட்டுமின்றி, டெல்டா ஏர் லைன்ஸ், அமெரிக்க ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் 1% விமானங்கள் ரத்தானதாக தெரியவந்துள்ளது.
புதன்கிழமை மட்டும் அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் இருந்து மொத்தமாக 21,464 விமானங்கள் புறப்படும் என திட்டமிடப்பட்டிருந்தது.

இதில் சுமார் 2.9 மில்லியன் பயணிகள் பயணம் மெற்கொள்வார்கள் எனவும் கூறப்பட்டது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மட்டும் அமெரிக்காவின் பல விமான நிலையங்களில் இருந்தும் மொத்தம் 4,819 விமானங்களை இயக்க திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.