அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அனைத்து சமூகத்தினரும் இணைந்து நடத்தக் கோரி வழக்கு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஒரு சமூக குழு நடத்தாமல் அனைத்து சமூகத்தினரும் இணைந்து நடத்த கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த முனியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

“தை 1ஆம் தேதி முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த வருடம் 15 ஜனவரி 2023ல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அவனியாபுரம், அம்பேத்கர் நகர் பகுதியில் பட்டியல் என சமூகத்தை சேர்ந்த மக்கள் 1000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். 2022ஆம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நீதிமன்ற உத்தரவை அடுத்து அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து நடைபெற்றது.

image
ஆனால், 2023 வருடம் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் ஒரு சமூக குழு மட்டும் நடத்தக்கூடிய சூழ்நிலை உள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டியில் பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே, 2022 ஆம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது போன்று நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து நடத்த உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நாளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.