ஆர்.ஆர்.ஆர். பட பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம்!….

ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. இந்த படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர்.

இந்தப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. இந்த நிலையில், ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம்பிடித்தது. திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது.

இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. ஒரிஜினல் பாடல் பிரிவில் எம்.எம்.கீரவாணி இசையமைத்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு விருது கிடைத்துள்ளது.

ஆஸ்கார் விருது நாமினேஷனிலும் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் இயக்குனர் ராஜமவுலி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு விருதினை பெற்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.