இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கௌகாத்தியில் நேற்று (10) நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 373 ஓட்டங்கள் பெற்றது.
இந்திய அணி சார்பில் விராட் கோலி 113 ஓட்டங்களும், ரோகித் சர்மா 83 ஓட்டங்களும், ஷூப்மான் கில் 70 ஓட்டங்களும் அதிகமாக பெற்றனர்.
இதையடுத்து 374 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 306 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இதனால் இந்திய அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பில் தசுன் சானக்க 108 ஓட்டங்களும், பெதும் நிசங்க 72 ஓட்டங்களும், தனஞ்ஜெய டி சில்வா 47 ஓட்டங்களும் அதிக ஓட்டங்களாக பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி நாளை (12) நடைபெறவுள்ளது.