இந்திய உணவு கழகத்தில் ஊழல்: 50 இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு| Corruption in Food Corporation of India: CBI in 50 places Raid

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இந்திய உணவு கழகத்தில் நடைபெற்ற மெகா ஊழல் புகார் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு நிறுவனமான எப்.சி.ஐ., எனப்படும் இந்திய உணவு கழகத்திற்கு தானியங்கள் சப்ளை செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நடந்த விசாரணையில்,தரமற்ற உணவு தானியங்கள் சப்ளை செய்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்தது தெரியவந்து.

latest tamil news

இது தொடர்பாக, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து ,இந்திய உணவு கழகத்தின் துணை பொது மேலாளர் ராஜிவ் மிஸ்ராவை கைது செய்தது. இதை தொடர்ந்து, இந்திய உணவு கழகத்தின் தொழில்நுட்ப உதவியாளர்கள், உணவு தானிய வர்த்தகர்கள், தானிய உற்பத்தி ஆலை அதிபர்கள் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகம் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.