லாஸ் ஏஞ்சல்ஸ், கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள காந்தாரா திரைப்படம், ‘ஆஸ்கர்’ விருதுக்கான பரிந்துரைப் போட்டியில் இரண்டு பிரிவுகளில் தகுதி பெற்றுள்ளது.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த காந்தாரா கன்னட மொழி திரைப்படம் கடந்த ஆண்டு செப்., மாதம் வெளியானது.
பதினாறு கோடி ரூபாய் செலவில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, 400 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் நடக்கவுள்ள 95வது ஆஸ்கர் விருது பரிந்துரைக்கு காந்தாரா திரைப்படம் அனுப்பப்பட்டது. இதில், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளில் போட்டியிட இப்படம் தகுதி பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைப் பட்டியலில் மொத்தம் 301 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு வரும் 12 – 17 வரை ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்கள் ஓட்டளிப்பர். அதன் அடிப்படையில், வரும் 24ல் இறுதிப் பரிந்துரைப் பட்டியல் வெளியாகும். மார்ச் மாதம் நடக்கும் ஆஸ்கர் விழாவில் விருது பெறும் திரைப்படம் அறிவிக்கப்படும்.
இந்த ஆண்டு காந்தாரா திரைப்படத்துடன், குஜராத்தி படமான செல்லோ ஷோ, தெலுங்கு படமான, ஆர்ஆர்ஆர், ‘பாலிவுட்’ படமான தி காஷ்மீர் பைல்ஸ், மராத்தி படங்களான மீ வசந்த்ராவ், துஜ்யா சாத்தி கஹி ஹி, தமிழ் படங்களான ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட், இரவின் நிழல், கன்னட படமான விக்ராந்த் ரோனா ஆகிய இந்தியப் படங்கள் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement