திருவண்ணாமலை ஆரணி அருகே, உணவகத்தின் கூரையை பிரித்து உள்ளே இறங்கிய இரண்டு பெண்கள், கல்லாப்பெட்டியிலிருந்த நான்காயிரம் ரூபாயை திருடிச்சென்றனர்.
ஆரணி – வேலூர் நெடுஞ்சாலையில் இயங்கி வந்த அந்த அசைவ உணவகத்தை, உரிமையாளர் காலையில் திறந்து பார்த்தபோது, கல்லா பெட்டியிலிருந்து பணம் திருடு போயிருந்தது.
சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, நள்ளிரவு ஒரு மணியளவில், கூரையை பிரித்து உள்ளே இறங்கிய இரு பெண்கள் பணத்தை சுருட்டிச்சென்றது தெரியவந்தது.
ஜெர்கின் அணிந்தபடி, துப்பட்டாவால் முகத்தை மறைத்து கைவரிசை காட்டிய இரு பெண்களையும் போலீசார் தேடிவருகின்றனர்.